ஒரு பெரிய செட்டிநாடு வீட்டை சங்கம் குரூப்ஸ் லீஸ்க்கு எடுத்து (மேல் தளம் மட்டும் ) அழகான ரிசார்ட் செய்திருக்கிறார்கள். "சிதம்பர விலாஸ் " புதுக்கோட்டை மாவட்டம் "கடியாப்பட்டி" யில் இருக்கிறது. ஊரின் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரம்மாண்ட வீடுகள். சிதம்பர விலாஸ் சுற்றி பார்க்கவே 1 மணி நேரம் வேண்டும். நீச்சல் குளம்,மினிபார் , பாரம்பரிய விளையாட்டுக்கள், செட்டி நாட்டு உணவு, கலாச்சாரம், அவர்கள் பயன் படுத்திய பொருட்கள், மித்தம், கிணறு, என அற்புதமாக இருக்கிறது.நல்ல வரவேற்பு உபசரிப்பு . சிறிய அளவில் கூட்டம் போடுவது, கெட்டுகெதர், நண்பர்கள் சந்திப்பு, என எல்லாவற்றிற்கும் ஏற்றார் போன்ற அரங்கம் இருக்கிறது. இந்த வீட்டின் உரிமையாளர்கள் இப்போதும் தங்கள் இல்லத் திருமணங்களை இங்கு வைத்து தான் நிச்சயிக்கி்றார்கள். பல பகுதிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அடிக்கடி திரைப்பட ஷூட்டிங் நடைபெறுகிற இடமாகவும் இருக்கிறது. சுற்றி முடித்து வெளியே வரும்போது பிரமிப்பின் உச்சத்துக்கு சென்று விடுகிறோம்.பல வருடங்களாக இந்த ரிசார்ட் இருந்து வருகிறது எனக்கு பார்ப்பதற்கு இன்றுதான் வாய்த்தது.