வாங்குற சம்பளம் போதவில்லையா
மாதாமாதம்
பட்ஜெட் உதைக்கிறதா ???
காலையில் தூங்கி எழுந்து கடைக்குப்போய் சாப்பிடுபவரா நீங்கள் இல்லை வீட்டிலேயே காபி சாப்பிடுபவரா ..
காலையில் வீட்டைவிட்டு வேலைக்கோ அல்லது ஏதாவது விஷேசத்திற்கோ போறீங்கன்னு வைச்சுக்கோங்க ..
ஒரு பேப்பரையும் பேனாவையும் கையில் எடுத்துட்டு போங்க
நீங்கள் ஏதாவது செலவு செய்தால் அப்போது கொடுக்கும் பணத்தை பேனாவை எடுத்து பேப்பரில் அப்பப்போ எழுதிவிடுங்கள்.
அப்படியே மாலை முழுவதும் நீங்கள் வாங்கிய சிகிரெட் முதற்கொண்டு குவாட்டர் சைடிஷ் வரை எழுதிவிடுங்கள்
காலையில் தூங்கி எழுந்து உங்கள் மாதச்சம்பளமோ அல்லது தினக்கூலியோ எவ்வளவு என கணக்கு பாருங்க ..
அதேபோல வீட்டிற்கு மாத செலவு அரிசி பருப்பு கரண்ட் பில் மொபைல் ரீசார்ஜ் சிலிண்டர் வரை கணக்குப்போட்டு மாதச்சம்பளத்திற்கும் பட்ஜெட்டையும் சரிபாருங்க
எவ்வளவு குறைகிறதென கணக்கு பாருங்க ...
இப்போது நீங்கள் நேற்று பேப்பரில் எழுதிய செலவுகளை மொத்தம் கூட்டி பாருங்க அதில் தேவையில்லாத செலவு தேவையான செலவு என இரண்டையும் பிரித்துப்பாருங்க ..நிச்சயம் அதில் தேவையில்லாத செலவுகளே அதிகரித்திருக்கும் ..
மறுநாள் பேப்பரையும் பேனாவையும் எடுத்துட்டு போங்க
இன்று நீங்கள் செய்யும் செலவை தேவையானது தேவையற்றதென இரண்டு பிரிவாக பிரித்து தனித்தனியாக எழுதி அதேபோல மறுநாள் தேவையில்லாத செலவை கூட்டிப்பார்த்து ...அடேங்கப்பா இவ்வளவு தேவையில்லாத செலவு செய்திருகேகோமா என தினமும் செய்துப்பாருங்க. .
நிச்சயம் தேவையில்லாத செலவுகள் குறைந்துவிடும் .