ஈழத்தின் தலைநகராய் அன்று அழைக்கப்பட்ட அனுராதபுரத்தை, ராஜராஜபெருவேந்தன் படையெடுத்து வென்று தன் ஆட்சிக்குகீழ் கொண்டுவந்தார்.இதற்கு முன்படையெடுத்த அரசர்கள் வடபகுதியை மட்டுமே கைப்பற்றினர், முதன்முறையாக ராஜராஜன் ஈழமண்டலம் முழுமையும் கைப்பற்றினார், ஆகவே தன்னை 'மும்முடிசோழன்' என பெருமையாய் அழைத்துக்கொண்டார். இந்நகரை "சனநாதமங்கலம்" என்று மாற்றினார். இங்கு தான்பெற்ற வெற்றியின் நினைவாய் சிலகோவில்கள் எழுப்புகிறார். அதில்ஒன்று இக்கோவில், இக்கோவிலில் முதலாம் ராஜேந்திரனின் கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டுள்ளது. இக்கோவில் 'வானவன்மாதேவீச்வரம்' என்ற அழைக்கப்படுவதால், தன் தாயாரின் நினைவாய் இக்கோவிலை கட்டியிருக்கக்கூடும்.
இக்கோவில் இலங்கையின் பொலன்னருவ மகானத்தில் உள்ளது.
புகைப்பட உதவி: முத்தரசன்